2016 யாழ்ப்பாண மேய்ப்புப்பணி மாநாட்டின்
ஆயத்தத்திற்கான சில சிந்தனைகள்
ஆயத்தத்திற்கான சில சிந்தனைகள்
எமது யாழ் மறை மாவட்டம் புதிய ஆயரைப் பெற்றபொழுது நான் என்னுடைய வாழ்த்துக்களையும் அனுபவ ரீதியில் வருங்கால தமிழ் திருச்சபையின் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டிருந்தேன். இப்பொழுது நடக்கவிருக்கும் மாநாட்டிற்கு உதவியாக சில கருத்துக்களை
மேலும் முன்வைக்க விரும்புகின்றேன்.
2. புதிய ஆயரைப் பெற்ற பொழுது எனது வாழ்த்து செய்தியில் கூறியிருந்தேன்:- ஓர் புதிய ஆயருடன் யாழ் மறை மாவட்டம் இன்னோர் ஓர் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கின்றது. ஓவ்வொரு ஆயரும், தனித்துவ திறமைகளுடைய ஒரு கிறிஸ்தவ சீடன், காலத்தின் சூழலுக்கேற்ப, தமது மக்களை வழி நடத்த இறைவன் அவரை முதலில் குருவாகவும் அதன் பின் ஆயராகவும் அழைத்திருக்கின்றார்.
3. புதிய ஆயர் இம்மாநாட்டை - புதிதாய் வாழ்வோம், விசுவசிப்பதை வாழ்வோம், விசுவசிப்பதற்கு வாழ்வாலும் செயலாலும் சாட்சியமளிப்போம் - எனும் மிகப் பொருத்தமான கருப்பொருளில் அழைப்புகளை விடுத்திருக்கின்றார். உங்களுடைய ஆயத்தங்களும் இத் திசையில் முன்னேறுவதை பாதுகாவலன் செய்திகள் வழியாக அறிகிறேன்.
4. எனது ஒரு முக்கிய கரிசனை என்னவென்றால், எமது தமிழ் கத்தோலிக்க திருச்சபை, எமக்கு இறைவன் கொடுத்த முழுச் சூழலிலே, கிறிஸ்துவின் உப்பாகவும் ஒளியாகவும் திகழ்ந்து, அச் சூழலில் வாழும் அத்தனை மக்களையும் சென்றடைந்து, அவர்களுக்கு, நற்செய்தியின் விழுமியங்களை ஊட்டி, அவர்களை சூழ்ந்திருக்கும் இருளை அகற்றி, கிறிஸ்து கொண்டுவந்த முழு மனித விடுதலையை அவர்களும் அடைய நமது பணிகளை ஆற்ற வேண்டுமென்பதே.
5. ஈழத்தமிழர்கள் மத்தியில், பெரும்பான்மையான இந்து சகோதரர் மத்தியில், எம்மனைவரையும் கிறீஸ்துவின் சீடர்களாக, அவரின் ஒளியாகவும் அவரின் நற்செய்தியை வாழ்வாலும் வார்த்தையாலும் அறிவிக்கும் சீடராகவும் வாழ அழைக்கப் படுகின்றோம். ஆகையால் எமது மறை மாவட்டக் கத்தோலிக்கரின் குழும வாழ்வும் பணியும், எமக்காக மாத்திரமல்ல, எம்மைச் சூழ்ந்து வாழும் அனைத்து மக்களுக்கும் உரித்தானது. நாம் உள்வாங்கும் இறை வார்த்தையும், அருட்சாதன விருந்தும் ஆவியின் ஏவுதலும் எம்மைப் பலப்படுத்தி, மக்கள் மத்தியில் மக்களுக்காகத் துணிவுடன் பணிவிடை செய்ய வலுச் சேர்க்கட்டும்.
6. இறை மக்கள் என்றவுடன் யாழ் மறை மாவட்டத்தில் வசிக்கும் தமிழ் கத்தோலிக்கரை மாத்திரம் நாம் எண்ணுவதல்ல. அப்பகுதியில் வாழும் எல்லா மனிதரும் இறைவனின் பிள்ளைகள். இவர்கள் மத்தியிலே கிறிஸ்து வழியாக, அவர் பணியைத் தொடர, பல கிறிஸ்தவ சபைகள் உள்ளன. அவைகளுள் கத்தோலிக்க திருச்சபையும் ஒன்று. கத்தோலிக்க திருச்சபை ஓர் தனித்துவ வரலாற்றையும் முதிர்ச்சியையும் முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. நாம் பெற்ற இறை வெளிப்பாட்டையும், அழைத்தலையும,; உருவாக்குதலையும் நன்றியுடனும், தாழ்மையுடனும், பொறுப்புடனும் ஏற்று, ஓர் பணி புரியும் குழுமமாக வாழவேண்டுமென்பதே எமது பேரவா.
7. இதற்கு முக்கிய முதற்படி எமது சூழல் என்ன என்பதை நாம் சரியாகக் கணிப்பிட வேண்டும். உண்மைதான், மாநாட்டில் பங்கேற்போர் அனைவரும் தமிழ் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். ஆனால் நாம் கிறிஸ்துவின் திருச்சபையாக தாயகத்தில் இருந்து செயற்பட வேண்டுமாயின், அல்லது எமது இருப்பை எமது சூழலில் நீதிப்படுத்த வேண்டுமாயின், நாம் யார்? யார் மத்தியில் வாழுகின்றோம்?, யாருக்காக வாழுகின்றோம்? என்ற கேள்விகளை எழுப்புவது மிக முக்கியம். கடந்த காலங்களில் நாம் எம்மையும் எமது கோவில்களையம் எமது அமைப்புகளையும் சுற்றி வேலிகளைப் போட்டு, நம்மையே மையமாக்கி, எமக்காகவும் எமது மீட்புக்காகவும் மாத்திரம் வெளிநாட்டு உதவிகள் முறைகளுடன் அந்நியராகவும் மேல் நாட்டை நோக்கியவர்களாகவும் வாழ்ந்திருக்கின்றோம். ஆனால் அண்மைக் காலங்களில் நடந்த துன்பநிறை அனுபவங்களுடாக எமது தோழமையையும் சமூக பொறுப்புகளையும் கூட உணர்ந்திருக்கின்றோம். ஆகையால் கிறிஸ்துவின் உப்பாகவும் ஒளியாகவும் பல் மத மக்கள் மத்தியில் எவ்வாறு வாழவும் செயற்படவும் வேண்டுமென்பதை சிந்தித்து, எவ்விதம் புதிதாய் வாழ்வோம், எவ்விதம் எமது விசுவாசத்திற்கு சாட்சியமளிப்போம் என்பதை மீளவும் முடிவு செய்வோம்.
8. கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் - இந்துக்கள் - இஸ்லாமியர் - இவர்கள் யார் என்பதை சரியாக, இன்றைய திருச்சபையின் புதிய பார்வையில் விளங்கிக் கொள்ள வேண்டும். நமது பெற்றோரின் விருப்பத்தினாலோ நம்முடைய தேர்வினாலோ திரு முழுக்கு பெற்று கிறிஸ்துவின் சீடராகியுள்ளோம். இது இறைவன் எம்மோவொருவருக்கும் கொடுத்த அழைத்தல், ஓர் பெரிய கொடை. இவ்வழைத்தலையும் கொடைகளையும் இறைவன் எமக்கு இனாமாக எம்முடைய ஒத்துழைப்பின்றி கொடுத்திருக்கின்றார். இவைகளை நாம் ஒவ்வொருவரும் நன்றியுடன் ஏற்று பெருமையுடன் பராமரித்து வளர்க்க வேண்டும். நாம் பெற்ற இக் கொடைகளை நமது வாழ்வினால் இன்னும் சிறப்பிக்கவும் முயல வேண்டும். அதே சமயத்தில் எமக்கு தட்டிக் கழிக்க முடியாத கடமைகளும் உண்டு.
9. இறைவன் மனிதர்களுக்கு பல் வேறு வழிகளில் தம்மை வெளிப்படுத்துகின்றார். எமது தாயகத்தில் வாழும் மனிதர்கள் அதிகமான தமிழர்கள்; சைவ சமயத்தை சேர்ந்தவர்கள். இன்னும் சிலர் இஸ்லாமியர். மத வழி பாடுகளில் வேறுபட்டாலும் இறைவனிலே விசுவாசம் கொண்டவர்கள். அவர்களும் இறைவனின் வெளிப்படுத்தலை ஏதோ ஒரு வழியில் வடிவத்தில் பெற்றிருக்கின்றனர். இறைவனின் வெளிப்படுத்தலை வேறு வடிவத்தில் பெற்றிருக்கும் மக்களின் விசுவாசத்தையும் வாழ்க்கை வழிபாடுகளை நாம் மதித்து நடக்க கடமைப் பட்டிருக்கின்றோம். அதே சமயத்தில் நமது சூழல் சமுதாய அரசியல் பிரச்சனைகள் அல்லது சவால்களை சந்திக்கும் பொழுது, எமது மனித அடிப்படையிலும், தெய்வீக விசுவாசத்தின் அடிப்படையிலும், ஒன்றாகச் சேர்ந்து செயற்பட கடமைப்பட்டிருக்கின்றோம்.
10. ஆனால் எமது தோழமையும் சேருதலும் கூட்டு செயற்பாடுகளும் கண்ணை மூடிக்கொண்டு அவர்களோடு போவதல்ல!!! மாறாக எமது கிறிஸ்தவ சீடத்துவத்தின் அடிப்படையில், அதாவது இயேசுவை ஒளியாக ஏற்று, அவரின் படிப்பினைகளின் ஒளியில்; அல்லது பார்வையில் உண்மைக்கும் நீதிக்கும் பிரமாணிக்கமாக இருந்தால் மட்டும் சேர்ந்து செயற்பட வேண்டும். அதே சமயத்தில் நாம் உப்பாக நற்செய்தி விழுமியங்களினூடாக மற்றவர்களையும் அவ் வழிக்கு தூண்டும் கருவிகளாக செயற்பட வேண்டும்.
11. முதற் பகுதியில் நாம் எமக்காக மாத்திரம் வாழாது, எம்மைச் சூழ்ந்திருக்கும் பெரும் பான்மையான மக்களின் மத்தியில் ஒளியாகவும் உப்பாகவும் செயற்பட வேண்டுமென்பதை விளக்கியிருந்தேன். இதை நாம் செய்வதற்கு இறை வார்த்தையின் ஊடாகவும் நற்கருணை விருந்தினூடாகவும் நம்மை எப்பொழுதும் பெலப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் இது மாத்திரம் போதாது. கோவில் வழிபாட்டை முடித்து உலக வாழ்விற்குள் நுளையும் போது நம்மை சூழ்ந்திருக்கும் மக்களைப் பற்றிய உண்மை நிலையை நாம் உணர்ந்து, அதற்கேற்ப நமது பார்வையையும் அணுகு முறைகளையும் மாற்றிக் கொள்ள வேண்டும். எமது பார்வை என்ன? அவர்களை அணுகும் முறையென்ன?
12. முன்பு நாமனைவரும் மிசனரிமாரிடமிருந்து கற்றுக் கொண்டது போல, அல்லது நாம் இற்றவரை நினைத்து கணித்தது போல, இருளில் மூழ்கி ஒரு வித தெய்வீக தாகமோ சுவையுமில்லாது வாழ்கின்றார்கள் அல்லது இரட்சணியமின்றி தவறான வழியில் செல்பவர்களல்ல. இது தான் எமக்குத் தேவையான இன்றியமையாத மன மாற்றம்.
13. ஆதியில் நாம் கிறீஸ்தவர்களாக மத மாற்றம் செய்த பொழுது, எமது இனம் மொழி, கலை, கலாச்சாரம், பாரம்பரியத்தை சியாக விளங்கிக் கொள்ளாதவர்கள், அல்லது சகலதும் சாத்தானின் செயல் எனக் கணித்தவர்கள், இறைவன் தமிழராகிய எமக்கு பிறப்புடன் இனாமாகக் கொடுத்தவற்றை சரியாக கணக்கவுமில்லை மதிக்கவுமில்லை. அவர்கள் தமது ஐரோப்பிய நாட்டுத் திருச்சபை அனுபவத்தின் அடிப்படையில், திருச்சபை எமது ஆன்மாக்களை இரட்சிக்கும் ஓர் அமைப்பாக மையப் படுத்தி, கோவில்களையும் அமைப்புகளையும் ஏற்படுத்தி, திரு முழுக்கின் வாயிலாக இரட்சிக்கும் சபையின் அங்கத்தினராக எம்மை சேர்த்துக் கொண்டனர். உலகமெனும் கப்பல் தாளப் போகின்றது, இரட்சணியம் வேண்டுமாயின் திருச்சபைக்குள் வாருங்கள் (ளூip ளை ளiமெiபெஇ பநவ iவெழ வாந டகைந-ளயஎiபெ டிழயவ உயடடநன வாந உhரசஉh) என்று எம் முன்னோரை அழைத்தனர். இன்று நிலமை அப்படியல்ல.
14. புதிய ஏற்பாட்டில் இயேசுவைப் பற்றியோ அல்லது அவர் தொடக்கிவைத்த இறையரசைப் பற்றியோ, அல்லது இறைவனைப் பற்றியோ போதியளவு எமக்கு ஊட்டப்படவில்லை. இறைவன் மோயீசன் வழியாகத் தந்த 10 கற்பனைகள், திருச்சபை ஏற்படுத்திய 6 கற்பனைகள், திருச்சபை கற்பிக்கும் விசுவாச மந்திரங்களே முக்கியத்துவம் பெற்றன. ஆனால்…
15. கடந்த நூற்றாண்டில் பாப்பசரின் அழைப்பில் 2000 மேலான உலக ஆயர்கள் கலந்து கொண்ட 2ம் வத்திக்கான் சங்கம், ஆபிரிக்கா ஆசியா போன்ற எமது நாடுகளில் ஆரம்பிக்கப் பட்ட திருச்சபைகளையும் அதன் வாழ்வு வழிபாடு போதனைகள் அனைத்தையும் பரிசுத்த ஆவியின் வழி நடத்தலில் மீளாய்வு செய்தன. இது எங்கள் திருச்சபைககுக்கு ஓர் புதிய பெந்திக்கோஸ்தாக அமைந்தது. இதன் படிப்பினைகளை 50 ஆண்டுகள் கடந்த பின்பும், நாம் பெரிதாக அவற்றை உள் வாங்கவில்லை.
16. திருச்சபையை புதுப்பிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன், பல முயற்சிகள் இலங்கையிலும் - மறைமாவட்டங்களிலும் முழு இலங்கைத் திருச்சபையாக (1968, 1995) – மாநாடுகள் நடாத்தப்பட்டன. பல ஏடுகள் தயாரிக்கப் பட்டு பிரசுரிக்கப் பட்டிருக்கின்றன. ஆனல் அவைகளை நடைமுறைப் படுத்துவதில், பல தடைகளும் குறை பாடுகளும் ஏற் பட்டிருக்கின்றன. யாழ் திருச்சபையும் 1994ல் ஆயர் தொமஸ் தலைமையில் மேப்புப்பணி நடாத்தி ஏடொன்றை வெளியிட்டது. செயல் படுத்த போரும் பல இடம்பெயர்வுகளும் தடைகளாகின. இப்போது நடாத்தப்படும் மாநாட்டிற்கு அவ்வித தடைகளின்றி, உண்மையான ஆளமான புதுப்பித்தலை நாங்கள் மேற்கொள்ள வேண்டும்.
17. திருச்சபையின் பாரம்பரிய அமைப்புக்களைப் பெலப்படுத்துவதோ புதிப்பிப்பதோ நமது நோக்கம் அல்ல. மாறாக நாம் எல்லோரும் கிறீஸ்துவன் சீடர்களாக, அவரைப் போல் சிந்திக்கவும் செயல்படவும், இன்றைய சூளலில் ஒளியாகவும் உப்பாகவும் மாறுவதே எமது நோக்கமாக இருக்க வேண்டும்.
18. இந்த நோக்கத்திற்காகத் தான் திருச் சபையையும் அதன் வழிபாடுகள் திரு விழாக்களையும் எமது வேலைத் திட்டங்களையும் புதுப்பிக்க வேண்டும். அன்று nஐருசலேம் தேவாலயத்தை சுத்திகரித்த இயேசு, இன்று எம்மத்தியில் வந்து, எமது வழிபாடுகளிலும் திருவிழாக்களிலும் நடை பெறும் பலவற்றை அகற்றி, எமது வழிபாடுகளைப் புதுப்பித்து, எம்மை தம் முடைய பார்வையும் ஆர்வமுள்ள சீடராக்கி, இன்றைய எமது உலகிற்குள் பொருத்தமான சேவை ய்ய எம்மை அனுப்புவாராக.